புரட்சி கலைஞர் விஜயகாந்திற்கு இன்று பிறந்தநாள்... முதல்வர் ஸ்டாலின், நடிகர் கமலஹாசன் வாழ்த்து !

vijayakanth

கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி முதல்வர் முக ஸ்டாலின், நடிகர் கமலஹாசன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் தனது 71வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி கோயம்பேட்டில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. பொதுவாக விஜயகாந்தின் பிறந்தநாளை அவரது கட்சியினரும், ரசிகர்களும் வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடி வருகின்றனர். 

vijayakanth

விஜயகாந்தின் பிறந்தநாளையொட்டி அரசியல் தலைவர்கள், ரசிகர்கள், திரையுலக பிரமுகர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின், நடிகர் விஜயகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,  தே.மு.தி.க நிறுவனத் தலைவரும், எனது தோழருமான திரு.விஜயகாந்த் அவர்களுக்கு உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள். முழு உடல்நலத்துடன் புத்துணர்ச்சியையும் பெற்றுப் பல்லாண்டு நீங்கள் மகிழ்ச்சியோடும் நிறைவோடும் வாழ விழைகிறேன்.


null

இதேபோன்று நடிகர் கமலஹாசன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இன்று பிறந்தநாள் காணும் என் மனதிற்கினிய நண்பர், தேமுதிக தலைவர், புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் அவர்கள் பல்லாண்டு வாழ மனதார வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார். 


 

Share this story