தலைவர் 171 படத்தில் இணையும் முன்னணி நட்சத்திரங்கள்

தலைவர் 171 படத்தில் இணையும் முன்னணி நட்சத்திரங்கள்

‘ஜெயிலர்’ படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் 170-வது படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை ‘ஜெய் பீம்’ படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்குகிறார். அனிருத் படத்திற்கு இசையமைக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து,  ரஜினி நடிக்கும் 171வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியானது. இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அன்பறிவு ஸ்டண்ட் இயக்குநர்களாக பணியாற்றுகின்றனர். 

தலைவர் 171 படத்தில் இணையும் முன்னணி நட்சத்திரங்கள்

இந்நிலையில், தலைவர் 171 படத்தில் மூன்று முக்கிய நட்சத்திரங்கள் நடிக்க உள்ளனர். சிவகார்த்திகேயன் மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், மலையாள சூப்பர் ஸ்டாராக அறியப்படும் மம்மூட்டியும் இதில் நடிப்பதாக தெரிகிறது. ஜெயிலர் படத்தை போலவே முன்னணி நட்சத்திரங்களை முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க லோகேஷ் களம் இறக்குவதாக கூறப்படுகிறது.  

Share this story