மாஸ் லுக்கில் ‘லெஜண்ட்’ சரவணன்... வேற லெவலில் போட்டோஷூட் !

legend saravanan

புதிய தோற்றத்தில் மாஸ் காட்டும் லெஜெண்ட் சரவணன் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.  

பிரபல தொழிலதிபராக இருக்கும் லெஜெண்ட் சரவணன், தனது கடையின் விளம்பரங்களில் நடித்து ரசிகர்களை கவந்தவர். முன்னணி நடிகைகளான ஹன்சிகா, தமன்னா, சினேகா ஆகியோரை தன்னுடன் நடிக்க வைத்து விளம்பர யுக்தியையே மாற்றினார். சினிமாவின் மீது கொண்ட ஆர்வத்தால் தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார். 

legend saravanan

அந்த வகையில் ‘ தி லெஜண்ட்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தனது விளம்பரங்கள் போல் பிரம்மாண்டமாய் எடுக்கப்பட்ட இந்த படத்தை ‘விசில்’ படத்தை இயக்கிய ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகிய இருவரும் இணைந்து இயக்கினார். மெடிக்கல் மாஃபியா குறித்து பேசிய இந்த படத்தில் விஞ்ஞானியாக சரவணன் நடித்திருந்தார். 

legend saravanan

சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியானது. இந்த படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா நடித்திருந்தார். இவர்களுடன் நடிகர்கள் பிரபு, விவேக், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

legend saravanan

கடந்த ஆண்டு வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து இந்த படம் சமீபத்தில் ஓடிடியிலும் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு அடுத்தடுத்த படங்களில் நடிக்கவுள்ளதாக சரவணன் அறிவித்திருந்தார். அதன்படி புதிய படத்திற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. 

legend saravanan

இந்நிலையில் திருமண நிகழ்வு ஒன்றிற்கு சென்ற லெஜண்ட் சரவணனின் மாஸான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில் தாடி மீசை ட்ரிம் செய்து கோட்ஷூட் உடையில் அசத்தலாக இருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் தற்போது டிரெண்ட்டிங்கில் உள்ளது.  முன்னணி நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் இந்த புகைப்படங்கள் உள்ளது. 

Share this story