நியூ லுக்கிற்கு மாறிய ‘லெஜண்ட்’ சரவணன்... புதிய தோற்றத்தை பார்த்து வியப்பில் ரசிகர்கள் !

legend saravanan

புதிய தோற்றத்தில் லெஜண்ட் சரவணன் மாறியுள்ள புகைப்படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. 

legend saravanan

தமிழகத்தில் பிரபல தொழிலதிபராக இருப்பவர் லெஜண்ட் சரவணன். நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்ட அவர், தனது கடைசியின் விளம்பரங்களில் தானே நடித்து பிரபலமானார். விளம்பரங்களில் ஹன்சிகா, தமன்னா, சினேகா என முன்னணி நடிகைகள் மட்டுமே நடித்து வந்த நிலையில் அவர்களுக்கு தான் சளைத்தவன் இல்லை என்பதை காட்டும் விதமாக விளம்பரங்களில் நடித்து மக்களை கவர்ந்தார். 

legend saravanan

இதையடுத்து சினிமாவில் களமிறங்கிய அவர் ‘லெஜண்ட்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தனது விளம்பரங்கள் போல் பிரம்மாண்டமாய் எடுக்கப்பட்ட இந்த படத்தை ‘விசில்’ படத்தை இயக்கிய ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகிய இருவரும் இணைந்து இயக்கினார். மெடிக்கல் மாஃபியா குறித்து பேசிய இந்த படத்தில் விஞ்ஞானியாக சரவணன் நடித்திருந்தார். 

legend saravanan

சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியானது. இந்த படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா நடித்திருந்தார். இவர்களுடன் நடிகர்கள் பிரபு, விவேக், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

legend saravanan

கடந்த ஆண்டு வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து இந்த படம் சமீபத்தில் ஓடிடியிலும் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு அடுத்தடுத்த படங்களில் நடிக்கவுள்ளதாக சரவணன் அறிவித்திருந்தார். அதன்படி புதிய படத்திற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் தனது அடுத்த படத்திற்காக வெறித்தனமான லுக்கிற்கு சரவணன் மாறியுள்ளார். இதையொட்டி சரவணன் மாஸாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் தாடி மீசை ட்ரிம் செய்து கூலிங் கிளாஸுடன் இருக்கும் அந்த புகைப்படங்கள் வரவேற்பை பெற்றுள்ளது. முன்னணி நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் இருக்கும் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Share this story