துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிக்கும் லெஜண்ட் சரவணன்..!
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக அறியப்படுபவர் துரை செந்தில்குமார். அந்த வகையில் இவர் எதிர்நீச்சல், காக்கி சட்டை, கொடி ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். கடைசியாக இவர் சூரி நடிப்பில் கருடன் எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்தது நயன்தாரா நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்குவதற்கு கமிட்டாகியுள்ளார் துரை செந்தில்குமார். இதற்கிடையில் இவர், லெஜண்ட் சரவணன் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.
பிரபல தொழிலதிபரான லெஜண்ட் சரவணன், லெஜண்ட் என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படத்தின் மேக்கிங் நன்றாக அமைந்திருந்தாலும் இந்த படம் லெஜண்ட் சரவணனுக்கு எதிர்பார்த்து வெற்றியை தரவில்லை. அதேசமயம் பலராலும் உருவக் கேலி செய்யப்பட்டார் . இந்நிலையில் தனது தோற்றத்தை மாற்றி புதிய லுக்கில் நடித்து வருகிறார். அதன்படி லெஜண்ட் சரவணன், துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று வரும் நிலையில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும் படம் தொடர்பான மற்ற அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் லெஜண்ட் சரவணனுக்கு இந்த படம் வெற்றி படமாக அமையும் எனவும் நம்பப்படுகிறது.