இளமை திரும்பும் நேரமிது.. லெஜண்ட்டின் புதிய தோற்றம் !

saravanan

பிரபல தொழிலதிபரும், நடிகருமான லெஜெண்ட் சரவணன் புதிய தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

saravanan

தென்னிந்தியாவில் பிரபல தொழிலதிபராக இருப்பவர் சரவணன். சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான அவர், தற்போது நடிகராக கலக்கி வருகிறார். முதன்முதலில் தன்னுடைய கடையின் விளம்பரங்களில் நடித்து பிரபலமானார். அந்த விளம்பரங்களுக்கு மக்களிடையே வரவேற்பு கிடைத்த நிலையில் தற்போது முழு நேர நடிகராக மாறிவிட்டார். 

saravanan

கடந்த ஆண்டு வெளியான ‘ தி லெஜண்ட்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். வித்தியாசமான கதைக்களத்தில் உருவான இந்த படத்தில் சயின்ட்டிஸ்டாக நடித்து அசத்தியிருந்தார். முதல் படமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. முதல் பட வெற்றியை தொடர்ந்து இரண்டாம் படத்திலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். 

saravanan

அதனால் அடுத்த படத்தில் நடிக்க புதிய தோற்றத்திற்கு மாறியுள்ளார். புதிய தோற்றத்திற்கான புகைப்படங்களை அடுத்தடுத்து சமூக வலைத்தளங்களிலும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் மாஸ் லுக்கில் சரவணன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே லைக்குகளை குவித்து வருகிறது. 

ஏ

 

Share this story