பழம்பெரும் நடிகை ஜமுனா காலமானார்.. சோகத்தில் திரையுலகம் !

jamuna

பழம்பெரும் நடிகை ஜமுனா வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார். 

தென்னிந்தியாவில் பழம்பெரும் நடிகையாக இருந்தவர் ஜமுனா. தமிழ் மற்றும் தெலுங்கில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் கடந்த 1954-ஆம் ஆண்டு வெளியான 'பணம் படுத்தும் பாடு' படத்தின் மூலம் நடிகையான அறிமுகமானார். மிஸ்ஸிம்மா, தெனாலிராமன், தூங்காதே தம்பி தூங்காதே உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். 

jamuna

எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்துள்ளார்.  ‌‌‌‌‌‌தமிழை விட தெலுங்கில் கொடிக்கட்டி பறந்தார். நடிகை, தயாரிப்பாளர், அரசியல்வாதி என பன்முக திறமைக் கொண்டு செயல்பட்டு வந்தார். நடிகை சாவித்ரியின் அழைப்பின் பெயரில் சினிமாவிற்குள் வந்தார். அப்பவே பான் இந்தியா நடிகையாக நடித்து வந்தார். 

86 வயதான ஜமுனா, வயது முதிர்வு காரணமாக ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவரின் மறைவு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Share this story