பழம்பெரும் நடிகை வசந்தா காலமானார்... திரையரங்கில் சோகம் !

vasantha

 பழம்பெரும் நடிகை வசந்தா வயது முதிர்வு காரணமாக இன்று காலமானார். 

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்தவர் வசந்தா. 1944-ஆம் ஆண்டு பிறந்த அவர் எழிசை மன்னர் எம்.கே.தியாகராஜா பாகவர் நாடக குழுவில் இடம்பெற்றது. முதலில் நாடகத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் நடிக்க வந்த அவர், அதன்பிறகு சினிமாவில் கால்தடம் பதித்தார். 

ஜெய் சங்கர் நடிப்பில் வெளியான ‘இரவும் பகலும்’ படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதன்பிறகு ‘கார்த்திகை தீபம்’ படத்தில் அசோகனுக்கு ஜோடியாக நடித்தார். பின்னர் ரஜினிகாந்த நடிப்பில் வெளியான ‘ராணுவ வீரன்’ அம்மா கதாபாத்திரத்திலும், ‘மூன்றாம் பிறை’ படத்தில் ஸ்ரீதேவியின் அம்மாவாகவும் நடித்துள்ளார். 

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இன்று மாலை 3.40 மணிக்கு வயது முதிர்வு காரணமாக வசந்தா காலமானார். அவருக்கு வயது 82. அவரது இறுதி சடங்குகள் நாளை மதியம் நடைபெற உள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 

 

 

 

Share this story