உலக அளவில் டிகாப்ரியோ படத்தை பின்னுக்குத் தள்ளிய 'லியோ'

உலக அளவில் டிகாப்ரியோ படத்தை பின்னுக்குத் தள்ளிய 'லியோ

லியோனார்டோ டிகாப்ரியோ நடித்துள்ள 'தி கில்லர்ஸ் ஆஃப் தி ஃபிளவர் மூன்' திரைப்படத்தை பின்னுக்குத் தள்ளி விஜய் நடித்துள்ள ' லியோ' திரைப்படம் நான்கு நாட்களில் 48.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்து சாதனை படைத்துள்ளது.

மார்ட்டின் ஸ்கார்செஸி இயக்கத்தில் லியானார்டோ டிகாப்ரியோ, ராபர்ட் டி நிரோ நடித்துள்ள படம் 'கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன்'. 1920களில் அமெரிக்காவின் ஓசேஜ் நேஷன் என்ற பழங்குடியின நிலத்தை கைப்பற்றிய அமெரிக்கர்கள், அங்கு நிகழ்த்திய தொடர் கொலைகளைப் பற்றி இப்படம் பேசுகிறது. இப்படம் கடந்த 20ஆம் தேதி பல்வேறு நாடுகளில் வெளியானது. இப்படம் இந்தியாவில் வரும் 27ஆம் தேதி வெளியாகிறது.

இந்த நிலையில், இப்படம் உலகம் முழுவதும் 44 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்துள்ளது. இப்படத்தின் வசூலை லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'லியோ' திரைப்படம் பின்னுக்கு தள்ளியுள்ளது. இப்படம் உலக அளவில் 48.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்துள்ளதாக திரைப்படங்களின் வசூல் குறித்து புள்ளிவிவரங்களை வெளியிடும் காம்ஸ்கோர் தளம் தெரிவித்துள்ளது.

Share this story