சென்னை: லியோ புக்கிங் ஏமாற்றம் தரும் திரையரங்கங்கள்- காரணம் என்ன?

photo

உலகம் முழுவதும் லியோ படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்துள்ள நிலையில் சென்னையில் பல திரையரங்குகளில் இன்னும் முன்பதிவு தொடங்காதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

photo

ஆக்ஷன் அதிரடியில் தயாராகியுள்ள லியோ படத்திற்கு உலகம் முழுவதும் ஆதரவும், எதிர்பார்ப்பும் உள்ளது. சிறப்பு காட்சிகளுக்கு கூட அரசு அனுமதி வழங்கி ரசிகர்களை மேலும் உற்சாகத்தில் ஆழ்த்தியது. படம் வெளியாக இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில்   தமிழகத்தில் நேற்று முன்தினமே பல இடங்களில் டிக்கெட் முன்பதிவு துவங்கிவிட்டது.  ஆனால் சென்னையில் பல தியேட்டர்களில் தற்போது வரை டிக்கெட் புக்கிங் துவங்காமல் இருப்பது ரசிகர்களுக்கு அதிருப்தியை கொடுக்கிறது.

photo

அதற்கு காரணம் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் லியோ பட விநியோகஸ்தர்களுக்கும் இடையே ஷேர் தொடர்பான இழுபறி நீடிப்பதுதான் என கூறப்படுகிறது. தற்போது கூட சென்னை காசி தியேட்டரில் டிக்கெட் வாங்க வந்த ரசிகர்களுக்கு ஒருவருக்கு கூட டிக்கெட் வழங்காமல் ஹவுஸ்ஃபுல் போர்டு போட்டு திருப்பி அனுப்பிய சம்பவம் நடந்துள்ளது.

Share this story