சென்னையில் லியோ பட முன்பதிவு தொடக்கம்
1697192871835

அக்டோபர் 19-ம் தேதி லியோ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், சென்னையில் படத்திற்கான முன்பதிவு தொடங்கியது.
நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி அமைத்து தயாராகி வரும் திரைப்படம் 'லியோ'. இந்த படத்தில் அவருக்கு ஜோடியா திரிஷா நடித்துள்ளார். ஆக்ஷன் அதிரடியில் உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் சஞ்சய் தத், மிஸ்கின், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த் என பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். லியோ படத்திலிருந்து 3 பாடல்கள் மற்றும் முன்னோட்டம் ஏற்கனவே வெளியாகி உள்ளன. வரும் 19-ம் தேதி திரைப்படம் வெளியாகிறது.
இந்நிலையில், சென்னையில் ஒரு சில திரையரங்குகளில் லியோ படத்திற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. இதனால், ரசிகர்கள் ஆர்வமுடன் முன்பதிவு செய்து வருகின்றனர்.