ரூ.500 கோடி வசூலை தாண்டியது லியோ திரைப்படம்

ரூ.500 கோடி வசூலை தாண்டியது லியோ திரைப்படம் 

நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி அமைத்து தயாராகி வரும் திரைப்படம் 'லியோ'. இந்த படத்தில் அவருக்கு ஜோடியா திரிஷா நடித்துள்ளார். ஆக்ஷன் அதிரடியில் உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் சஞ்சய் தத், மிஸ்கின், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த் என பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். லியோ படத்திலிருந்து 3 பாடல்கள் மற்றும் முன்னோட்டம் ஏற்கனவே வெளியாகி உள்ளன. கடந்த 19-ம் தேதி உலகம் முழுவதும் இத்திரைப்படம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 

ரூ.500 கோடி வசூலை தாண்டியது லியோ திரைப்படம் 

இந்நிலையில், லியோ திரைப்படம் 500 கோடி வசூலை தாண்டியது. கடந்த 6 நாட்களில் 560  கோடி ரூபாய்க்கு மேல் உலகம் முழுவதும் லியோ திரைப்படம் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனை, ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
 

Share this story