ஒரு நாள் கூட சம்பளம் தரவில்லை - 'லியோ' நடன கலைஞர்கள் வேதனை

ஒரு நாள் கூட சம்பளம் தரவில்லை - 'லியோ' நடன கலைஞர்கள் வேதனை

லியோ பட பாடலுக்கு நடனம் ஆடியதற்காக ஒரு நாள் கூட ஊதியம் வழங்கவில்லை என நடன கலைஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி அமைத்து தயாராகி வரும் திரைப்படம் 'லியோ'. இந்த படத்தில் அவருக்கு ஜோடியா திரிஷா நடித்துள்ளார். ஆக்ஷன் அதிரடியில் உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் சஞ்சய் தத், மிஸ்கின், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த் என பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே, படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. 

ஒரு நாள் கூட சம்பளம் தரவில்லை - 'லியோ' நடன கலைஞர்கள் வேதனை

இந்நிலையில், லியோ படத்தின் நான் ரெடி தான் பாடலுக்காக 6 நாட்கள் நடனம் ஆடியதற்காக ஒரு நாள் கூட சம்பளம் தரவில்லை என நடன கலைஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இன்னும் 3 நாட்களுக்குள் சம்பவளம் வரவில்லை என்றால், நிச்சயம் நீதிமன்றத்திற்கு செல்வோம் என நடன கலைஞர்கள் தெரிவித்துள்ளனர். 

Share this story