லியோ பட புகைப்படங்கள் லீக்.... படக்குழு அதிர்ச்சி...

லியோ பட புகைப்படங்கள் லீக்.... படக்குழு அதிர்ச்சி...

விஜய் நடித்துள்ள லியோ படத்திலிருந்து ஒரு சில புகைப்படங்கள் வெளியானதால், படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.

லியோ பட புகைப்படங்கள் லீக்.... படக்குழு அதிர்ச்சி...

நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி அமைத்து தயாராகி வரும் திரைப்படம் 'லியோ'. இந்த படத்தில் அவருக்கு ஜோடியா திரிஷா நடித்துள்ளார். ஆக்ஷன் அதிரடியில் உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் சஞ்சய் தத், மிஸ்கின், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த் என பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இதற்கிடையே, படத்திலிருந்து இரண்டு பாடல்கள் மற்றும் முன்னோட்டம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. வரும் 19-ம் தேதி லியோ திரைப்படம் வெளியாக உள்ளது.

லியோ பட புகைப்படங்கள் லீக்.... படக்குழு அதிர்ச்சி...

இந்நிலையில், லியோ படத்திலிருந்து ஒரு சில புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆனதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. சமூக வலைதளங்கள் மற்றும் இணையத்தில் இருந்து புகைப்படங்களை நீக்கும் பணியில் படக்குழு ஈடுபட்டுள்ளது.

Share this story