வசூலை வாரிக் குவிக்கும் லியோ.. ரூ.148 கோடி வசூல்..

வசூலை வாரிக் குவிக்கும் லியோ.. ரூ.148 கோடி வசூல்..

ரசிகர்கள் வெறிதனமாக காத்திருந்த லியோ படம் இன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. பலரும் படத்தை பார்க்க தியேட்டர் முன்பு கூடி வெடி வெடித்து படத்தை வரவேற்றனர். இந்த நிலையில் சென்னையியல் உள்ள வெற்றி திரையரங்கில் ரசிகர்களுடன் அமர்ந்து படத்தை பார்த்துள்ளார் படத்தின் இயக்குநரான லோகேஷ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத்.

வசூலை வாரிக் குவிக்கும் லியோ.. ரூ.148 கோடி வசூல்..

தொடர்ந்து மற்ற மாநிலங்களில் படம் அதிகாலையே வெளியிடப்பட்ட நிலையில், படத்தை பார்த்த ரசிகர்கள் லியோ குறித்த விமர்சனத்தை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், லியோ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, முதல் நாளில் மட்டும் 148 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது. நடப்பு ஆண்டில் முதல் நாளில் இவ்வளவு வசூலித்த முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமை லியோ படத்திற்கு கிடைத்துள்ளது. அதேபோல, இங்கிலாந்தில் மட்டும் 5 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. 

Share this story