லியோவுக்கு கூடும் மவுசு... திரை நட்சத்திரங்கள் வாழ்த்து...

லியோவுக்கு கூடும் மவுசு... திரை நட்சத்திரங்கள் வாழ்த்து...

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம், உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் நாளை வெளியாகவுள்ளது. இந்த படத்தில் அர்ஜுன், த்ரிஷா, சஞ்சய் தத் மற்றும் திரைப்பட இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்க, படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ளது. படம் தொடர்பான அப்டேட்டுகள் அடுத்தடுத்து வர வர, படத்தின் மீதான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், லியோ திரைப்படம் வெற்றி பெற திரை நட்சத்திரங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். நடிகர் விஷால், ராகவா ராலன்ஸ் மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் ஆகியோர் படத்திற்கும், படக்குழுவினருக்கும் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளனர்.

Share this story