‘லியோ’ ஐந்து நாள் கலெக்ஷன்- இத்தனை கோடியா!
1698135663398
லியோ படம் வெளியாகி 5நாட்கள் ஆன நிலையில் படத்தின் மொத்த வசூல் எவ்வளவு என்ற தகவல் வெளியாகியுள்ளது.
விஜய், த்ரிஷா ஜோடி பல ஆண்டுகளுக்கு பின் இணைந்த படம் ‘லியோ’. இந்த படத்தில் சஞ்சய் தத், மிஸ்கின், அர்ஜுன், சாண்டி மாஸ்டர், ப்ரியா ஆனந்த், கௌதம் மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். படம் விஜயதசமி, ஆயுதபூஜை விடுமுறையை குறிவைத்து வெளியானதால் நல்ல வசூலை ஈட்டியுள்ளது. அந்த வகையில் படம் இந்திய அளவில் ரூ. 200 கோடியை ஈட்டியுள்ளது. மேலும் உலக அளவில் லியோ ரூ.438 கோடியை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படி படம் வசூலில் பட்டையை கிளப்பி வருவது, படக்குழுவினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தொடர்ந்து விஜய்யின் லியோ விரைவில் 1000 கோடி கிளப்பில் இணையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.