அர்ஜூன் கேரக்டரை வெளியிட்டு டிரைலருக்கு ஹைப் கொடுத்த ‘லியோ’ படக்குழு.

photo

விஜய்யின் ‘லியோ’ படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியான வண்ணம் உள்ள நிலையில் தற்போது படத்தில் அர்ஜூன் கதாப்பாத்திரத்திற்கான புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

photoபல ஆண்டுகளுக்கு பின்னர் விஜய்-த்ரிஷா ஜோடி சேர்ந்துள்ள லியோ படத்தில் இவர்களுடன் இணைந்து மிஸ்கின், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், சண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த், அர்ஜூன், சஞ்சய் தத் என பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். லோகேஷ் இயக்கத்தில் தயாராகியுள்ள இந்த படம் வரும் 19அம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில் படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியான வண்ணம் உள்ளது. தற்போது படத்தில் அர்ஜூனின் கேரக்டருக்கான புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

photo

அதில் புகைப்பிடித்தப்படி மிரட்டும் வகையில் மாஸ்ஸாக அமர்ந்துள்ளார் அர்ஜூன். அந்த போஸ்டரில் லியோ படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என குறிப்பிட்டு ரசிகர்களின் எதிர்பார்பை எகிற வைத்துள்ளனர் படக்குழுவினர்.

Share this story