‘லியோ’-வின் ஆடியோ லாஞ்ச்... விஜய் எடுத்த அதிரடி முடிவு.. செம்ம ஹோப்பியில் தென் தமிழக மக்கள் !

leo

விஜய் ‘லியோ‘ ஆடியோ லாஞ்ச் குறித்து முக்கிய தகவல் ஒன்றை தயாரிப்பாளர் லலித் தெரிவித்துள்ளார். 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’. இந்திய சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் ஆயுதப்பூஜையையொட்டி வரும் அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர்களுடன்  சஞ்சய் தத், கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 

leo

இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் 50 நாட்கள் நடைபெற்றுள்ளது. இதில் 50 சதவீத படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது.  இதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

leo

இந்நிலையில் ‘லியோ’ படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், விஜய் படங்களின் இசை வெளியீட்டு விழா வழக்கமாக சென்னையில் நடைபெறும். ஆனால் ‘லியோ’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை தென் மாவட்டங்களில் வைக்குமாறு நடிகர் விஜய் கண்டிப்புடன் கூறியுள்ளளாராம். அதாவது மதுரை, திருச்சி, கோவை ஆகிய மூன்று மாவட்டங்களில் ஒரு இடத்தில் நிகழ்ச்சியை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இது தென் மாவட்ட மக்களை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

மேலும் பேசிய அவர், ‘லியோ’ படத்தை முதலில் தமிழில் மட்டுமே வெளியிட திட்டமிட்டோம். தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியிட முடிவு செய்துள்ளோம் என்று கூறியுள்ளார். 

 

 

 

 

 

Share this story