கேன்சலான ‘லியோ’ பட ஆடியோ லாஞ்ச்- வருத்தத்தில் ரசிகர்கள்.
ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருந்த ‘லியோ’ படட்தின் ஆடியோ லாஞ்ச் ரத்து செய்யப்படுவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கான காரணத்தையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
தளபதி விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி அமைத்து தயாராகிவரும் திரைப்படம் 'லியோ'. இந்த படத்தில் அவருக்கு ஜோடியா திரிஷா நடித்துள்ளார். ஆக்ஷன் அதிரடியில் உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் சஞ்சய் தத், மிஸ்கின், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த் என பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது.
Considering overflowing passes requests & safety constraints, we have decided not to conduct the Leo Audio Launch.
— Seven Screen Studio (@7screenstudio) September 26, 2023
In respect of the fans' wishes, we will keep you engaged with frequent updates.
P.S. As many would imagine, this is not due to political pressure or any other…
இந்த நிலையில் அடுத்த மாதம் 19ஆம் தேதி வெளியாகவுள்ள படத்தின் புரொமோஷன் பணிகளை படக்குழு துவங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக படத்தின் ஆடியோ லாஞ்ச் நடக்கும் என்றும், அதில் விஜய் கூறப்போகும் குட்டி ஸ்டோரிக்காகவும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த சமயத்தில் ஆடியோ லாஞ்ச் ரத்து செய்யப்படுவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளனது. அதில்” எண்ணற்ற பாஸ் கோரிக்கை மற்றும் பாதுகாப்பு கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு ஆடியோ லாஞ்ச்சை நடத்த வேண்டாம் என் முடிவு செய்துள்ளோம். இது எந்த அரசியல் அழுத்தத்தினாலோ, அல்லது வேறு காரணத்தினாலோ அல்ல” என தெளிவுப்படுத்தியுள்ளனர்.