‘லியோ’ படத்தில் கேமியோ ரோல் செய்த நடிகரால் அதிர்ந்த அரங்கம்.
‘லியோ’ படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் தமிழகம் மட்டுமல்லாது உலகின் பல இடங்களில் திருவிழா போல படத்தை கொண்டாடி வருகின்றன விஜய் ரசிகர்கள். இந்த நிலையில் படம் LCUல் இருக்குமா? படத்தில் யார் கேமியோ ரோல் செய்துள்ளார்? என்பது மாதிரியான கேள்விகளும் அதற்கு பல கருத்துகளும் இணையத்தில் இதுநாள் வரை வெளியாகி வந்ததை தொடர்ந்து தற்போது படம் வெளியான நிலையில் கோமியோ ரோலில் வந்த நடிகரால் அரங்கமே அதிர்ந்துள்ளது.
அவர் வேறு யாரும் இல்லை, நடிகர் ஜார்ஜ் மரியான் தான் அவர். அவர் லோகேஷின் ‘கைதி’ படத்தில் ஒரு சாதாரண கான்ஸ்டபிள் ரோலில் நடித்து, அசத்தல் நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். லியோவில் விக்ரமான கமல் நடித்திருப்பாரா? இல்லை ரோல்க்ஸ் சூர்யா நடித்திருப்பாரா? அல்லது டில்லி கார்த்தியா? என பல கேள்விகள் வந்த நிலையில் நான் தான் என ஜார்ஜ் மரியானின் எண்ட்ரி ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.அவர் வரும் காட்சிகளில் ரசிகர்கள் ஆர்பரித்து கைதட்டல், விசில்களை பறக்க விடுகின்றனர்.