‘லியோ’ படத்தின் ரன்னிங் டைம் மற்றும் சென்சார் குறித்த தகவல்.
தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள வெளியான வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்போது படத்தின் ரன்னிங் டைம் மற்றும் சென்சார் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த படத்தில் ‘லியோ’ படமும் ஒன்று. விஜயின் அதிரடி ஆக்ஷனில் தயாராகியுள்ள் இந்த படத்தில் திரிஷா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். தொடர்ந்து மிஸ்கின், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், சண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த், அர்ஜூன், சஞ்சய் தத் என பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். தொடர்ந்து படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்து நாளை படத்தின் ட்ரைலர் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் தற்போது படத்தின் ரன்னிங் டைம் மற்றும் சென்சார் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
வரும் 19ஆம் தேதி வெளியாகவுள்ள லியோ படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 43 நிமிடங்கள், மற்றும் சென்சாரில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாக சினிமா வட்டார விவரங்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து அட்வான்ஸ் புக்கிங்கில் பட்டையை கிளப்பி வரும் லியோ வசூலில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.