LCU - ல் 'லியோ' வருமா ?... இயக்குனர் லோகேஷ் கனகராஜின் சூப்பர் பதில் !

leo

 LCU - ல் 'லியோ' திரைப்படம் உருவாகி வருகிறதா என்பது குறித்து புதிய விளக்கம் ஒன்றை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் நடிகர் விஜய் மாஸ் நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். வரும் அக்டோபர் மாதம் இந்த படம் வெளியாக உள்ளது. இதையொட்டி படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள இப்படத்தின் பணிகள் விரைவில் நிறைவுபெற உள்ளது. 

leo

லோகேஷ் படங்கள் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக இருக்கும். அதாவது ஹாலிவுட் பாணியில் லோகேஷ் சினிமானிட்டிக் யுனிவர்சல் எடுத்து வருகிறார். அந்த வகையில் ‘லியோ’ படமும் LCU - ல் உருவாகிறது என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இது குறித்த தகவல் மிக சீக்கரெட்டாக வைத்துள்ளார் லோகேஷ்.

இந்நிலையில் ‘லியோ’ குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றை லோகேஷ் கனகராஜ் கொடுத்துள்ளார். அதில், LCU  பற்றி 20 ஆண்டுகளுக்கு பிளான் இருப்பதாக கூறப்படுவது உண்மையா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், நிறைய படங்கள் இயக்கவேண்டும் என்று நான் ஆசைப்பட்டதில்லை. அதேபோன்று நிறைய நாட்கள் சினிமாவில் இருக்கவேண்டும் என்ற எண்ணமும் இல்லை. 

leo

உண்மையை சொல்வதென்றால் 10 படங்கள் இயக்கிவிட்டு சினிமாவை விட்டு வெளியேறி விடுவேன் என்று ஷாக்கிங் செய்தி ஒன்றை கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், ‘லியோ’ திரைப்படம் மாஸாக இருக்கும். LCU - ல் லியோ படம் வருகிறதா என்பதை காண மூன்று மாதங்கள் காத்திருங்கள்.  நிறைய சர்ப்ரைஸ்கள் நிறைந்திருக்கும். ஜூன் 22-ஆம் தேதி மிகப்பெரிய சர்ப்ரைஸ் காத்திருக்கிறது என்று கூறினார்.

 

 

Share this story