இன்று நள்ளிரவில் வெளியாகும் ‘லியோ’ ஃப்ர்ஸ்ட் லுக்.. காத்திருக்கும் தரமான சம்பவம் !

leo

விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘லியோ’ படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று நள்ளிரவு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘லியோ’. இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜூன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

leo

மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு அனிரூத் இசையமைத்து வருகிறார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னையில் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இன்னும் 10 நாட்களில் விஜய் நடிக்கும் காட்சிகள் நிறைவுபெற்று விடும். இதையடுத்து ஒட்டுமொத்த படப்பிடிப்பும் அடுத்த மாதத்திற்குள் முடிந்துவிடும் என தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘நா ரெடியா’ பாடல் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரசிகர்கள் காத்திருக்கும் வேளையில் ‘லியோ’ படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் இன்று நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகும் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். விஜயின் பிறந்தநாளையொட்டி இந்த ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


 

 

 

Share this story