அரசியல் நெடி வீசும் ‘நா ரெடி’ பாடல்... விஜய்யின் அரசியல் அஸ்திவாரமா ?

leo
விஜய்யின் லியோ படத்தின் பாடலின் வரிகள் அரசியல் நெடி வீசுவதாக நெட்டிசன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

விஜய்யின் படத்திற்கு எப்போதும் உச்சப்பட்ச எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் லோகேஷ் இயக்கும் ‘லியோ’ படத்திற்கு இதுவரை இல்லாத அளவிற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் லோகேஷ் - விஜய் கூட்டணி இணைந்ததுதான். முழுக்க முழுக்க கேங்ஸ்டர் படமாக உருவாகி வரும் இந்த படம்  ஆயுதப்பூஜையையொட்டி அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   

leo

நடிகர் விஜய் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடி வரும் நிலையில் ‘லியோ’ படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது. நேற்று நள்ளிரவு இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில் தற்போது ‘நா ரெடி’ என்ற ஃப்ர்ஸ்ட் சிங் பாடல் வெளியாகியுள்ளது. அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலை விஜய் மற்றும் அசல் கோலார் இணைந்து பாடியுள்ளனர். 

leo

இந்நிலையில் இப்பாடலின் இடம்பெற்றுள்ள வரிகள் விஜய்யின் அரசியல் வருகை குறித்து பேசுவதாகவே உள்ளது. அந்த பாடலில் “நா ரெடிதான் வரவா.. தோள் கொடுக்கும் சிங்கத்த சீண்டாதப்பா.. எவன் தடுத்து என் ரூட்டு மாறாதப்பா தெரண்டடிக்குற பறை அடிக்கணும்.. நா ஆட தான்.. வெரலடிக்குற நீ பந்தம் நா ஏத்த தான்.. என வரிகள் இடம்பெற்றுள்ளது. இந்த வரிகள் தற்போது தீயாய் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்துள்ளது. 

ஏற்கனவே பட ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சிகளில் சில அரசியல் கருத்துக்களை வெளியிடுவது விஜய்யின் வழக்கம். அதனால் நீண்ட நாட்களாக அவர் அரசியல் வருவதாக கூறப்படுகிறது. ‘தலைவா’ படத்திலும் டைம் டூ லீட் என்ற வார்த்தை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதேபோன்று சமீபத்தில் நடைபெற்ற கல்வி விருது விழாவும் விஜய்யின் அரசியல் வருகைக்காக தான் என கூறப்படுகிறது. இதுதவிர விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. இதையெல்லாம் பார்க்கும் போது விஜய் அரசியலுக்கு வருவது உறுதியாகியுள்ளது. தற்போது ‘நா ரெடி‘ பாடல் வரிகள் சமூக வலைத்தளத்தில் பேசும்பொருளாக மாறியுள்ளது. 


 

Share this story