அசர வேட்டை நடத்தும் ‘நா ரெடி’ பாடல்... தொடர்ந்து யூடியூப் டிரெண்ட்டிங்கில் லியோ ஃப்ர்ஸ்ட் சிங்கிள் !

leo

‘லியோ’ படத்தின் ‘நான் ரெடி’ பாடல் தொடர்ந்து யூடியூப்பில் டிரெண்ட்டிங்கில் உள்ளது. 

விஜய் நடிப்பில் வெறித்தனமாக உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’. கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்திற்கு இந்திய சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் உள்ளனர். அதனால் திட்டமிட்டபடி படத்தை வெளியிட படக்குழுவினரும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். 

leo

வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இந்த படத்தின் பணிகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே காஷ்மீரில் 50 சதவீத படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில் மீதமுள்ள படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. 

leo

விஜய் பிறந்தநாளையொட்டி ‘லியோ‘ அப்டேட்டுகளை படக்குழு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ‘நா ரெடி‘ என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது. விஜய் மாஸ் லுக்கில் இருக்கும் இந்த பாடல் ரசிகர்களை மிகவும் கவர்ந்து இந்த பாடலில் சிகரெட் பிடித்துக் கொண்டு விஜய் இருக்கிறார். அதோடு நடனமாடும் ஸ்டைல் ரசிகர்களை நடனமாட வைத்துள்ளது. 

leo

அனிரூத் இசையில் தாறுமாறாக உருவாகியுள்ள இந்த பாடலை விஜய் பாடியுள்ளனர். விஷ்ணு எடவன் எழுதியுள்ள இந்த பாடலுக்கு தினேஷ் மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். இந்நிலையில் சிறிது நேரத்திற்கு முன்னர் வெளியான இந்த பாடல் டியூடிப்பில் தொடர்ந்து டிரெண்ட்டிங்கில் உள்ளது. இதுவரை 2 மில்லியன் வியூஸ்களை கடந்து லியோ பாடல் சென்றுள்ளது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

 

 

Share this story