விஜய் குரலில் மாஸாக உருவாகியுள்ள ‘நா ரெடி’ பாடல்.. பட்டையை கிளப்பும் ‘லியோ’ ஃப்ர்ஸ்ட் சிங்கிள் !

leo

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ படத்தின் முதல் பாடல் ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. 

விஜய் நடிப்பில் மிரட்டலாக உருவாகி வருகிறது ‘லியோ’ திரைப்படம். இந்த படத்திற்கு நாளுக்கு நாள் எதிர்பார்ப்புகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதற்கு காரணம் படக்குழுவிலிருந்து வெளியாகும் அடுத்தடுத்த அப்டேட்டுகள் தான். அதனால் படத்தை பார்க்க ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். 

leo

தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பிற்காக கஞ்சா தொழிற்சாலை செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய காட்சிகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த மாத இறுதிக்குள் அனைத்து படப்பிடிப்பும் நிறைவுபெற்று விடும் என கூறப்படுகிறது. அதேபோன்று இந்த படத்திற்கான கிராபிக்ஸ் பணிகளில் ஹாலிவுட்டில் பணியாற்றும் கலைஞர்கள் பங்கேற்றுள்ளார். 

leo

இந்நிலையில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் பாடல் வரும் ஜூன் 22-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி இப்பாடலின் ப்ரோமோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. ‘நான் ரெடி’ தான் என தொடங்கும் அந்த பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளார். அனிரூத் இசையில் உருவாகியுள்ள அந்த பாடலுக்கு தினேஷ் மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share this story