‘லியோ’ ஓடிடி ரிலீஸ் தேதி இதோ!
1700458584997

தளபதி விஜய்-லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான ‘லியோ’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது.
த்ரிஷா, சஞ்சய் தத், மிஸ்கின், அர்ஜுன், சாண்டி மாஸ்டர், ப்ரியா ஆனந்த், கௌதம் மேனன், மடோனா ஆகியோரது நடிப்பில் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி வெளியான லியோ படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூலில் நல்ல வரவேற்பை பெற்றது. அதாவது படம் உலக அளவில் கிட்டதட்ட ரூ 540 கோடிக்கு மேல் வசூலித்தாக தகவல் வெளியானது இந்த நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.
அதாவது படம் இம்மாதம் 24ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இந்தியாவிலும், 28ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.