முன்னரே வெளியாகும் ‘லியோ’ படம் – ரசிகர்கள் உற்சாகம்.
தளபதி விஜய் நடிப்பில் வெளியீட்டிற்கு தயாராகிவரும் ‘லியோ’ படம் அறிவித்த நாளுக்கு முன்னரே வெளியாகும் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நீண்ட இசைவேலைக்கு பின்னர் விஜய்- த்ரிஷா இணையும் இந்த படத்தில் பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மன்சூர் அலிகான், சஞ்சய் தத், கவுதம் மேனன், பாபு ஆண்டனி என பலர் நடித்துள்ளனர். ரசிகர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகவுள்ள இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியான வண்ணம் உள்ளது. இந்த நிலையில் படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. தற்போது வந்துள்ள தகவல் ரசிகர்கள உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதாவது லியோ படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் படம் வெளியாவதற்கு ஒரு நாளைக்கு முன்னர் அதாவது 18ஆம் தேதியே பிரீமியர் ஷோவாக வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.