விஜய்யுடன் மோத தயாராகும் சஞ்சய் தத்.. மிரட்டலான புகைப்படம் வைரல் !

leo

‘லியோ’ படத்திற்காக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் தயாராகும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ‘. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர்களுடன்  சஞ்சய் தத், கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

leo

இந்த படம் ஆயுதப்பூஜையையொட்டி வரும் அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்து வருகிறார்.  இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. 

leo

இந்நிலையில் இப்படத்தில் முக்கிய வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிப்பதாக கூறப்படுகிறது. அதனால் உடற்பயிற்சி செய்து தனது உடலை ஃபிட்டாக மாற்றி வருகிறார் சஞ்சய் தத். இது குறித்த மிரட்டலான புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. 

Share this story