‘லியோ’ படத்தின் ரன்னிங் டைம் குறித்த லேட்டஸ்ட் தகவல்.

photo

ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துள்ள ‘லியோ’ படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

photo

தளபதி  விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி அமைத்து தயாராகிவரும் திரைப்படம் 'லியோ'. இந்த படத்தில் அவருக்கு ஜோடியா திரிஷா நடித்துள்ளார். ஆக்ஷன் அதிரடியில் உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் சஞ்சய் தத், மிஸ்கின், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த் என பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள்  விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

photo

இந்த நிலையில் படம் உலகம் முழுவதும் வரும் அக்டோபர் மாதம் 10ஆம் தேதி வெளியாகவுள்ளதை தொடர்ந்து தற்போது படத்தின் புது புது போஸ்டர் தினம் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் நிலையில் லேட்டஸ்ட் தகவலாக படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் வந்துள்ளது. அதன்படி படம் மொத்தமாக 2 மணிநேரம் 39 நிமிடங்கள் என கூறப்படுகிறது. மேலும் விரைவில் சென்சார் குறித்த ரிப்போர்ட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story