‘லியோ’ படத்தின் ‘BADASS’ பாடல் வெளியானது.

leo

தளபதி விஜய்யின் அதிரடி ஆக்ஷனில் உருவாகியுள்ள ‘லியோ’ படத்தின் செகண்ட் சிங்கிளான ‘BADASS’ பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

photo

லோகேஷின் பக்கா மாஸ் கதைகளத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். தொடர்ந்து மிஸ்கின், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், சண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த், அர்ஜூன், சஞ்சய் தத் என பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படம் அடுத்த மாதம் 19ஆம் தேதி ஆயுதபூஜை, சரஸ்வதிபூஜை உள்ளிட்ட பண்டிகை கால   விடுமுறையை குறிவைத்து  வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் படத்தின் முதல் பாடலான ‘நான் ரெடி தான் வரவா…’ பாடல் வெளியாகி பட்டையை கிளப்பியது. தற்போது படத்தின் அடுத்த பாடலான ‘BADASS’ என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடல் வரிகளை விஷ்ணு எடாவன் எழுதியுள்ளார்.  இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.  

Share this story