‘லியோ’ படத்தின் இரண்டாம் பாடலுக்கான புரொமோ இதோ:

photo

ரசிகர்கள்  வெறிதனமாக காத்திருந்த ‘லியோ’ படத்தின் செகண்ட் சிங்கிள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று மாலை வெளியான நிலையில் தற்போது  அந்த BADASS  பாடலுக்கான புரொமோ வெளியாகியுள்ளது.

photo

இந்த ஆண்டு ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த படத்தில் ‘லியோ’ படமும் ஒன்று. விஜயின் அதிரடி ஆக்ஷனில் தயாராகியுள்ள் இந்த படத்தில் திரிஷா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். தொடர்ந்து மிஸ்கின், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், சண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த், அர்ஜூன், சஞ்சய் தத் என பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘நான் ரெடிதான் வரவா…..’ பாடல் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. தற்போது செகண்ட் சிங்கிள் குறித்த அப்டேட் வந்துள்ளது.


அதன்படி, செகண்ட் சிங்கிளான ‘BADASS’ என்ற பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவித்து படக்குழு புரொமோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் Mr Leo Das is a Badass என்ற வாரிகள் இடம்பெற்றுள்ளது.

Share this story