‘லியோ’ செகண்ட் சிங்கிள் அப்டேட்- குஷியான ரசிகர்கள்.

விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் அட்டகாசமாக தயாராகிவரும் ‘லியோ’ படத்தின் செகண்ட் சிங்கிள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதிரடி ஆக்ஷன் படமாக தயாராகிவரும் லியோ படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் மேனன், அர்ஜுன் உள்ளிட்டடோர் நடித்துள்ளனர். இந்த ஆண்டில் ரசிகர்கள் அதியகம் எதிர்பார்க்கும் படங்களுள் லியோவும் உள்ளது. சமீபத்தில் படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் பாடலாம ‘நான் ரெடி தான் வரவா’ பாடல் வெளியாகி இணையத்தை அதிரவிட்ட நிலையில், படத்தின் அடுத்த பாடல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பாடல் இம்மாதம் இரண்டவது வாரத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூரவ அறிவிப்பு வெளியாகும்.
படம் அடுத்த மாதம் 19ஆம் தேதி வெளியாவதையொட்டி போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் படுஜோராக நடந்து வருகிறது. மல்டி ஸ்டார் படம் என்பதாலும், இதுவரை லோகேஷ் தனது படங்களில் தரமான சம்பவங்களை செய்திருப்பதாலும் இந்த படத்திற்கான ஆவல் ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது.