BADASS- ‘லியோ’ செகண்ட் சிங்கிள் அப்டேட் கொடுத்த படக்குழு.

ரசிகர்கள் வெறிதனமாக காத்திருந்த ‘லியோ’ படத்தின் செகண்ட் சிங்கிள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த படத்தில் ‘லியோ’ படமும் ஒன்று. விஜயின் அதிரடி ஆக்ஷனில் தயாராகியுள்ள் இந்த படத்தில் திரிஷா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். தொடர்ந்து மிஸ்கின், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், சண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த், அர்ஜூன், சஞ்சய் தத் என பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘நான் ரெடிதான் வரவா..’ பாடல் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. தற்போது செகண்ட் சிங்கிள் குறித்த அப்டேட் வந்துள்ளது.
வ்#Badass ma#LeoDas ma#LEO 🔥🧊 pic.twitter.com/XQpCkQJ5p2
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) September 27, 2023
அதன்படி, செகண்ட் சிங்கிளான ‘படாஸ்’ என்ற பாடல் நாளை வெளியாகும் என அறிவித்து படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். லியோ ஆடியோ லாஞ்ச் கேன்சலானது சற்று மன வருத்தத்தை கொடுத்தாலும் இந்த தகவல் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.