காஷ்மீரில் விஜய்யுடன் சஞ்சய் தத்.. ‘லியோ’ ஷூட்டிங் ஸ்பாட் சர்ப்ரைஸ் வீடியோ !

leo

‘லியோ’ படப்பிடிப்பில் விஜய்யுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இருக்கும் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. 

leo

மாஸ் கிளாஸ் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’. விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷனில் உருவாகி வருகிறது. இந்திய சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. அதனால் இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியையும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் செதுக்கி வருகிறார். 

leo

சுமார் 500-க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த படத்தில் பணியாற்றி வருகின்றனர். 60 நாட்கள் திட்டமிடப்பட்டுள்ள இந்த படம் காஷ்மீரில் கடும் குளிரில் படமாக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. 

leo

இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய வில்லனாக நடிக்கும் சஞ்சய் தத், நேற்று படப்பிடிப்பில் இணைந்தார். இது குறித்த வீடியோ ஒன்றை படக்குழு சர்ப்ரைஸாக வெளியிட்டுள்ளது. அதன்படி காஷ்மீர் விமானத்திற்கு வரும் சஞ்சய் தத்தை படக்குழுவினர் வரவேற்கின்றனர். அதன்பிறகு படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு வரும் அவரை, நடிகர் விஜய் வரவேற்கிறார். பின்னர் இருவரும் பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோவில் பெப்பர் சால்ட் ஸ்டைலில் விஜய் மாஸாக இருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 leo


 

Share this story