‘லியோ’ ஷூட்டிங்கில் விஜய்யுடன் திரிஷா.. இணையத்தை கலக்கும் புகைப்படம் !

leo

‘லியோ’ படப்பிடிப்பு விஜயுடன் நடிகை திரிஷா இருக்கும் புகைப்படம் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. 

தென்னிந்தியாவில் முக்கிய நடிகையாக இருப்பவர் திரிஷா. தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 20 ஆண்டுகளுக்கு கதாநாயகியாக மட்டுமே நடித்து வருகிறார். முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்துள்ள அவர், தற்போது தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

leo

தற்போது விஜய்யுடன் இணைந்து 'லியோ' படத்தில் திரிஷா நடித்த வருகிறார்.  கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் - திரிஷா கூட்டணி இணைந்துள்ளது. ஏற்கனவே கில்லி, திருப்பாச்சி, குருவி ஆகிய மூன்று படங்களில் இணைந்து நடித்துள்ளனர். தற்போது ‘லியோ’ படத்தில் நான்காவது முறையாக இணைந்துள்ளனர். 

 தற்போது விஜய்யுடன் திரிஷா இணைந்து நடிப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ‘லியோ‘ படத்தில் விஜய்யுன் திரிஷா இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த படம் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. இதேபோன்று திரிஷா பிறந்தநாளில் விஜய்யுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை திரிஷா வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story