‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு குறித்து வெளியான சூப்பர் தகவல்.

photo

விஜய், லோகேஷ் மாஸ்கூட்டணியில் தயாராகிவரும் திரைப்படம் ‘லியோ’. இந்த வருடம் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களுள் இந்த படமும் ஒன்று. இந்த நிலையில் ரசிகர்கள் படத்தின் ஒவ்வொரு அப்டேட்டிற்காவும் வெறித்தனமாக காத்துள்ளனர். அந்த வகையில் தற்போது படத்தின் படப்பிடிப்பு குறித்த சூப்பர் தகவல் வெளியானது.

photo

சமீபத்தில் காஷ்மீர் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு படக்குழு சென்னை திரும்பிய நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு நாளை மறுநாள் சென்னையில் உள்ள பிரசாத் லேப்பில் படமாக்கப்பட இருக்கிறதாம், 17நாட்கள் இங்கு படப்பிடிப்பை முடித்துக்கொண்டு ; அடுத்ததாக இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் செல்ல உள்ளார்களாம் படக்குழுனர். விறுவிறுப்பாக நடைபெறும் இந்த படம் வரும் அக்டோபர் மாதம் 19ஆம் தேதி ஆயுதபூஜை விடுமுறையையொட்டி  வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

photo

த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மாத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தில் ஃபஹத் பாசிலும் இணைந்துள்ளதாக காத்துவாக்குல செய்திகள் பரவிவருகிறது. எது எப்படியோ இது குறித்து படக்குழு அறிவித்தால் மட்டுமே உண்மை நிலவரம் தெரியவரும்.

Share this story