இணையத்தில் லீக்கான ‘லியோ’ ஷூட்டிங் காட்சி... அதிர்ச்சியில் படக்குழுவினர் !

விஜய்யின் ‘லியோ’ படத்தின் ஷூட்டிங் காட்சி இணையத்தில் கசிந்ததால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் ‘லியோ’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர்களுடன் சஞ்சய் தத், கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்து வருகிறார். இந்த படம் ஆயுதப்பூஜையையொட்டி வரும் அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் காட்சி ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. இதை பார்த்த படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் யாராவது பகிர்ந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பட தயாரிப்பு நிறுவனம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.