'லியோ' ஷூட்டிங் வீடியோ லீக் விவகாரம்... லோகேஷ் எடுத்த அதிரடி முடிவு !

leo

விஜய்யின் 'லியோ' படத்தின் படப்பிடிப்பு காட்சி லீக்கான நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார். 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ'. இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து த்ரிஷா,  சஞ்சய் தத், கௌதம் மேனன், அர்ஜூன், மிஷ்கின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களை நடித்து வருகின்றன. தற்போது இந்த படத்திற்கான படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. 

leo

மொத்தம் 60 நாட்கள் திட்டமிடப்பட்டுள்ள இந்த படப்பிடிப்பில் சுமார் 500க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகள் மற்றும் தொழிற்நுட்ப கலைஞர்கள் பணியாற்றி வருகின்றனர். இதற்கிடையே இந்த படப்பிடிப்பு தளத்தின் காட்சி ஒன்று சமீபத்தில் இணையதளத்தில் கசிந்தது. இதைப் பார்த்த படக்குழுவினர் அதிர்ச்சியில் உறைந்தனர். 

இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.  அதன்படி படபிடிப்பு தளத்திற்கு யாரும் செல்போனை எடுத்து வரக்கூடாது என கண்டிப்பாக கூறியுள்ளாராம். அதோடு படப்பிடிப்பு வரும் ஒவ்வொரு நபரும் சோதனை செய்த பிறகு அனுமதிக்கப்படுகிறார்கள். 'லியோ' படத்தை பார்க்க ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் காத்துக் கொண்டிருக்கிறது. அதனால் விஜய்யின் லுக்கை படத்தில் மட்டுமே காட்ட லோகேஷ் கனகராஜ் காட்ட திட்டமிட்டிருப்பதால் இந்த முடிவு என கூறப்படுகிறது. 

 

Share this story