‘லியோ’ சிறப்பு காட்சிக்கு அனுமதி ஆனால்.. ஒரு ட்விஸ்ட்!- அதிர்ப்தியில் ரசிகர்கள்.
1697252427595
தளபதி விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் ரிலீசுக்கு தயாராகியுள்ளபடம் ‘லியோ’. இந்த படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கிய நிலையில் தற்போது ட்விஸ்ட் ஒன்றை வைத்துள்ளது. இது தளபதி ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

வரும் 19ஆம் தேதி ‘லியோ’ படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசு தற்போது அது குறித்த அரசானையை வெளியிட்டுள்ளது. அதில், வரும் 19 ஆம் தேதி காலை 9 மணிக்கும் தொடர்ந்து 20,21,22,23 மற்றும் 24 ஆகிய 6 நாட்களில் லியோ படத்தை தமிழகத்தில் வெளியிட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. 9 மணிக்கு துவங்கும் இந்த காட்சிகள் இரவு 1.30 மணியுடன் கடைசி ஷோவை முடித்துக்கொள்ள வேண்டும் என அந்த அரசானையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

