மீண்டும் காஷ்மீர் சென்ற லோகேஷ்... 'லியோ' குறித்து புதிய அப்டேட் !

leo

 'லியோ' படத்தின் படப்பிடிப்பிற்காக லோகேஷ் கனகராஜ் மற்றும் படக்குழுவினர் காஷ்மீர் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெறித்தனமாக உருவாகி வருகிறது 'லியோ'. ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிரூத் இசையில் தாறுமாறாக இப்படத்தின் பாடல்கள் உருவாகி வருகிறது.  ‌

leo

இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் மேனன், பிரியா ஆனந்த், அர்ஜூன், மன்சூர் அலிகான், சாண்டி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். வரும் அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இந்த படத்தின் பணிகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது. இதையடுத்து சென்னை மற்றும் ஆந்திராவில் படப்பிடிப்பு நடைபெற்றது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பிற்காக லோகேஷ் கனகராஜ் மற்றும் படக்குழுவினர் காஷ்மீர் சென்றுள்ளனர். ஒரு வாரம் நடைபெறும் இந்த படப்பிடிப்பில் சில விடப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளது.  ‌ 

Share this story