ஹைடெக் கேமிராவில் படமாகும் ‘லியோ’.. அசத்தல் வீடியோ !

leo

‘லியோ’ படத்திற்காக ஹைடெக் கேமிரா பயன்படுத்தும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. 

leo

நடிகர் விஜய்யின் நடிப்பில் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் ‘லியோ’ படம் உருவாகி வருகிறது. வித்தியாசமான கேங்ஸ்டர் கதையில் உருவாகும் இந்த படத்திற்கு உச்சப்பட்ச எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதனால் இந்த படத்தின் ஒவ்வொரு விஷயத்தையும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் செதுக்கி வருகிறார். 

leo

அந்த வகையில் இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக நவீன ரக கேமிராக்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது உயர் செயல் திறன்மிக்க V-RAPTOR XL Red Cam பயன்படுத்தப்படுகிறது.  தற்போது காஷ்மீரில் படப்பிடிப்பு நடைபெற்று வருவதால் அதற்கேற்றவாறு காட்சிகள் படமாக்க ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா முயற்சி வருகிறார். அதற்காக சில யுக்திகளை பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. 

leo

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர்களுடன்  சஞ்சய் தத், கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்து வருகிறார்.  இந்த படம் ஆயுதப்பூஜையையொட்டி வரும் அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

leo

 


 

Share this story