'லியோ' பாடல் உருவானது‌ எப்படி ?... வீடியோ வெளியிட்ட அனிரூத் !

leo

'லியோ' படத்தில் டைட்டில் டீசரில் வரும் பின்னணி பாடல் உருவான விதம் குறித்த வீடியோ ஒன்றை அனிரூத்  வெளியிட்டுள்ளார்.

 நடிகர் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் மிரட்டலாக உருவாகி வருகிறது 'லியோ'. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நீண்ட இடைவெளிக்கு பிறகு திரிஷா நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர் உள்ள பகல்ஹாம் பகுதியில் நடைபெற்று வருகிறது. 60 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ள இந்த படப்பிடிப்பு முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் படக்குழுவினர் பணியாற்றி வருகின்றனர். 

leo

இதற்கிடையே கடந்த வாரம் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதையொட்டி இப்படத்தின் டைட்டில் டீசர் ஒன்று வெளியிடப்பட்டது. இந்த டீசரில் பின்னணி பாடல் உருவான விதம் குறித்த வீடியோ ஒன்றை இசையமைப்பாளர் அனிரூத் வெளியிட்டுள்ளார். மிகுந்த வரவேற்பை பெற்ற இந்த பாடலை சித்தார்த் பாஸ்ரூர் என்பவர் பாடியுள்ளார்.

leo

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்த படம் ஆயுதப்பூஜையையொட்டி வரும் அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சஞ்சய் தத், திரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


 

Share this story