அடித்துக்கூட கேட்பாங்க.. சொல்லாதீங்க.. கௌதம் மேனனுக்கு லோகேஷ் சொன்ன அட்வைஸ் !

leo

‘லியோ’ படத்தின் முக்கிய அப்டேட்டை இயக்குனர் கௌதம் மேனன் கூறியுள்ளார். 

 லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’. இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து த்ரிஷா,  சஞ்சய் தத், கௌதம் மேனன், அர்ஜூன், மிஷ்கின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களை நடித்து வருகின்றன. இந்த படம் ஆயுதப்பூஜையையொட்டி வரும் அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

leo

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. கடந்த 50 நாட்களாக சுமார் 500-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வந்த இந்த படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறைவுபெற்றது. இதையடுத்து நடிகர், நடிகைகள் சென்னை திரும்பினர். 

leo

இந்த படத்தின் படப்பிடிப்பு எவ்வளவு கடினமாக இருந்தது என்பது குறித்த வீடியோ ஒன்றை படக்குழு இன்று வெளியிட்டது. சிறிய இடைவெளியில் இருக்கும் படக்குழுவினர் விரைவில் சென்னையில் மீண்டும் படப்பிடிப்பை தொடங்கவுள்ளனர். இதையடுத்து ஐதராபாத் மற்றும் மூணாறு ஆகிய இடங்களிலும் படப்பிடிப்பை நடத்தவுள்ளனர்.

இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் கௌதம் மேனன், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசினார். அதில், ‘லியோ’ படம் குறித்து நீங்கள் தெரிந்துக் கொள்ள ஆர்வமாக உள்ளீர்கள். படம் குறித்து எதுவும் சொல்லக்கூடாது என லோகேஷ் கூறியிருக்கிறார். ஆனால் ஒரு விஷயம் மட்டும் சொல்ல முடியும். படம் அற்புதமாக வந்திருக்கிறது. விஜய்யுடன் பணியாற்றியது சிறந்த அனுபமாக இருக்கிறது என்று கூறினார். 

 

 

Share this story