விஜய்க்கு தந்தையாக நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகர்... ‘லியோ’ மாஸ் அப்டேட் !

leo

விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘லியோ’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

விஜய்யின் அசத்தலான நடிப்பில் உருவாகி வருகிறது ‘லியோ’. லோகேஷ் கனகராஜின் மிரட்டலான இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அனிரூத் இப்படத்திற்கு பின்னணி இசையை அமைத்து வருகிறார்.  ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வருகிறது.

leo

விஜய் வித்தியாசமான கெட்டப்பில் நடித்து வரும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது. கடும் குளிரில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.  இந்த படப்பிடிப்பில் க்ளைமேக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. சென்னை படப்பிடிப்பை முடித்து ஐதராபாத் விமான நிலையம் மற்றும் ரமோஜி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. 

leo

இதுதவிர பாடல் பதிவிற்காக படக்குழுவினர் வெளிநாடும் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ‘லியோ’ படம் குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் விஜய்க்கு அப்பா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடித்துள்ளாராம். இந்த தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. இதுதவிர விஜய்யின் ‘வாரிசு’ படத்தின் இந்தி வெறும் 1.5 கோடிக்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது ‘லியோ’ படம் 5 கோடிக்கு விற்கப்பட்டது. அதனால் ‘லியோ’ படம் இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Share this story