பிரம்மாண்டமாக உருவாகும் ‘லியோ’ படத்தின் பாடல் - அசத்தல் அப்டேட்.

photo

 விஜய் நடிப்பில் ரசிகர்களின் வெறிதனமான எதிர்பார்ப்பில் தயாராகிவரும் திரைப்படம் ‘லியோ’ இந்த படத்தின் பாடல் குறித்த அசத்தல் அப்டேட் வெளியாகியுள்ளது.

photo

லோகேஷ் கனகராஜ் படங்கள் என்றாலே அதற்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்த வகையில் தற்போது நடிகர் விஜய்யை வைத்து கேங்ஸ்டர் கதைகளம் கொண்ட படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய்யுடன் த்ரிஷா, சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், மிஷ்கின், அர்ஜூன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் பலர் நடிக்கின்றனர். லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் படமாக்கப்பட்ட நிலையில் தற்போது சென்னையில் சூட்டிங் நடந்து வருகிறது.

photo

லேட்டஸ்ட் அப்டேட்டாக லோகேஷ் கனகராஜ் இப்படத்தின் அறிமுக பாடலை 2000 கலைஞர்களை வைத்து படமாக்க திட்டமிட்டுள்ளாராம், படத்தின் நடனத்தை தினேஷ் குமார் கையாளுகிறார்.  இதற்கு முன்னர் 'மாஸ்டர்' படத்தில் விஜய்யின் அறிமுக பாடலை 500+ நடனக் கலைஞர்களை வைத்து  படமாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரம்மாண்டமாக தயாராகும் இந்த பாடல் குறித்த தகவல் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்பை மேலும் அதிகரித்துள்ளது.

Share this story