‘வணங்கான்’ படத்தில் இணையும் ‘லியோ’ வில்லன்... புதிய அப்டேட்

vanagaan

பாலாவின் ‘வணங்கான்’ பிரபல இயக்குனர் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நீண்ட இடைவெளிக்கு பிறகு பாலா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘வணங்கான்’. சூர்யா நடிக்கவிருந்த இந்த படத்தில் அவர் விலகியதால் தற்போது அருண் விஜய் கதாநாயகனாக நடித்து வருகிறார். 'ஜடா', ஏமாளி உள்ளிட்ட சில படங்களில் நடித்த பிரபல கன்னட நடிகை ரோஷினி பிரகாஷ் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். 

vanagaan

இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். மீனவர் கதைக்களம் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி பகுதியில் செட் அமைக்கப்பட்டு நடைபெற்று வந்ததது. இதில் அருண் விஜய் நடிக்கும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டது. 

vanagaan

இதையடுத்து தற்போது திருவண்ணாமலை பகுதியில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவுபெற உள்ளது. இந்நிலையில்  இப்படத்தில் பிரபல இயக்குனர் மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இணையவுள்ளார். ‘மாவீரன்’ படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்திருந்த மிஷ்கின், தற்போது ‘லியோ’ படத்திலும் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story