லீக்கான ‘லியோ’ ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல்.

photo

தளபதி விஜய்யின் லியோ படம் கடந்த 19ஆம் தேதி தியேட்டரில் வெளியாகி ஒடிவரும் நிலையில் தற்போது படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது, எந்த தளத்தில் படம் வெளியாகிறது உள்ளிட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

photo

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படம் வெளியாகி ஒரு வாரம் ஆன நிலையில் படம் ரூ. 461 கோடி வசூலித்துள்ளதாக பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த நிலையில் படம் எந்த ஓடிடி தளத்தில் எப்போது வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளம் வரும் நவம்பர் 21ஆம் தேதி வெளியிட உள்ளார்களாம். இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பதை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் மட்டுமே தெரியவரும்.

Share this story