அதிகாலை காட்சிக்கு அனுமதி கோரிய வழக்கு: நீதிபதி சொன்னது என்ன?
லியோ படத்தின் அதிகாலை காட்சிக்கு அனுமதி கோரி தயாரிப்பு நிறுவனம் சார்பாக தொடரப்பட்ட வழக்கு குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதுன் லியோ ஃபீவர் பரவியுள்ளது. படம் வரும் 19ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் 24ஆம் தேதி வரை ஒரு நாளைக்கு 5 காட்சிகள் வீதம் திரையிட்டுக்கொள்ள அரசு அனுமதி வழங்கியது. காலை 9மணிக்கு முதல் காட்சி துவங்கி இரவு 1.30 மணிவர படத்தை திரையிட்டுக்கொள்ளலாம் என அரசு அனுமதி வழங்கியுள்ளது. இருந்தாலும் மற்ற மாநிலங்களில் லியோ அதிகாலை 4 மணிக்கு ,முதல் காட்சி திரையிடப்பட உள்ளதால். தமிழகத்திலும் லியோ சிறப்பு காட்சிக்கு அனுமதி வேண்டும் என பட தயாரிப்பு நிறுவனம் சார்பாக வழக்கு தொடரப்பட்டது. மேலும் அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் வழக்கை நாளை காலை முதல் வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக கூறி வழக்கை நாளை காலைக்கு ஓத்தி வைத்தார் நீதிபதி அனிதா சுமந்த். தொடர்ந்து நாளைய தீர்ப்பிற்காக விஜய் ரசிகர்கள் காத்துள்ளனர்.